Quantcast
Channel: கணியம்
Viewing all articles
Browse latest Browse all 1916

open-tamil சொற்பிழைத்திருத்தி பற்றிய உரைக்கு இரண்டாம் பரிசு

$
0
0

மார்ச் 12, 13, 14 2021 ல் நடைபெற்ற Tamil Computing – Tools and Applications Young Researchers’ Conference 2021 (TaCTA-YRC2021) மாநாட்டில் ‘Building Open Source SpellChecker for Tamil‘ என்ற தலைப்பில் கணியம் அறக்கட்டளை சார்பாக த. சீனிவாசன் “Open-Tamil” பைதான் நிரல் தொகுப்பு மூலம் நடைபெற்று வரும் சொற்பிழைத்திருத்தி முயற்சிகள் பற்றி உரையாற்றினார்.

பல்வேறு தலைப்புகளில் பல இளம் ஆய்வாளர்கள் உரையாற்றினர்.

நிகழ்ச்சி நிரல்
www.infitt.org/tacta2021/program.html

நிகழ்வின் காணொளிகள்

நாள் – 1

நாள் – 2

நாள் – 3

 

 

நிகழ்வின் சிறந்த உரைகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

த. சீனிவாசன் அவர்களது உரைக்காக இரண்டாம் பரிசு ரூ 10,000 பெற்றார். அத்தொகையை கணியம் அறக்கட்டளைக்கு நன்கொடையாக அளித்தார்.

இனிய நிகழ்வை ஏற்பாடு செய்த உத்தமம் அமைப்பு, அண்ணா பல்கலைக்கழகம், பரிசுகள் தந்த ஐலேசா, கேசிடி தமிழ் மன்றம், மற்றும் எழில் அறக்கட்டளை, கணியம் அறக்கட்டளை, “Open-Tamil” பங்களிப்பாளர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.


Viewing all articles
Browse latest Browse all 1916