Quantcast
Channel: கணியம்
Viewing all articles
Browse latest Browse all 1914

எளிய தமிழில் Computer Vision 15. படக்கருவி வில்லையும் (Camera lens) ஒளியமைப்பும்

$
0
0

இணையப் படக்கருவிகளைப் (Webcams) பொதுவான வேலைகளுக்குப் பயன்படுத்துவதால் ஒருங்கிணைந்த (integrated) வில்லைகளுடன் வருகின்றன. ஆகவே இவற்றை மாற்ற இயலாது. தொழில்துறை இயந்திரப் பார்வை படக்கருவிகள் வில்லைகள் இல்லாமல் வருகின்றன. ஏனெனில் வேலையைப் பொறுத்து வெவ்வேறு உருப்பெருக்கத்தில் (magnification), பல்வேறு குவிய நீளங்களில் (focal lengths) மட்டுமல்லாமல், பலவிதமான பிரிதிறன்களிலும் (resolutions) இதற்கு வில்லைகள் தேவைப்படும்.

கைமுறைக் கருவிழியும் (Manual iris) தானியங்கிக் கருவிழியும் (Auto iris)

கைமுறைக் கருவிழிகளில், ஒளியை அதிகமாகவோ அல்லது குறைவாகவோ அனுமதிக்க நீங்கள் கருவிழியின் திறப்பைக் கையால் சரிசெய்யலாம். இது பொதுவாக நிறுவலின் போதுதான் செய்கிறோம். 

தானியங்கிக் கருவிழி மின்விசைப்பொறி (motor) பொருத்தப்பட்டது, அது நாள் முழுவதும் மாறிவரும் ஒளிக்குத் தகுந்த மாதிரி கருவிழித் திறப்பைத் தானாக சரிசெய்துகொள்ளும். 

ஒற்றைக் குவிய நீள (Monofocal), கைமுறைக் கருவிழி படக்கருவி வில்லைகள்

ஒற்றைக் குவிய நீள (Monofocal), கைமுறைக் கருவிழி படக்கருவி வில்லைகள்

குவிய நீளத்தைக் (focal Length) கணக்கிடுதல்

ஒரு பயன்பாட்டிற்கான சரியான வில்லையைத் தேர்ந்தெடுக்கும்போது, வடிவமைப்பாளர்கள் மூன்று காரணிகளைப் பயன்படுத்தித் தேவையான வேலை தூரத்தைக் கணக்கிடுகிறார்கள். அதாவது குவிய நீளம், பரிசோதிக்கப்படும் பொருளின் நீளம் மற்றும் உணரி அளவு. பொருள் அளவு மற்றும் வில்லையின் திறப்பு கோணத்தைப் பயன்படுத்தித் தேவையான அளவு தூரத்தைக் கணக்கிடலாம். 

விசையில் இயங்கும் பெரிதாக்க வில்லைகள் (Motorized zoom lenses)

நீங்கள் படம் எடுக்கும் பொருட்களின் உயரங்களும் பணி தூரங்களும் மாறுபடும் என்றால் விசையில் இயங்கும் பெரிதாக்க வில்லைகள் தேவை. இதேபோல விசையில் இயங்கும் குவியமும் தேவைப்படலாம். இரண்டுமே கணினி கட்டுப்பாட்டில் இயங்கும்.

திரவ வில்லைகள் (Liquid lens)

திரவ வில்லைகளில் எந்தவொரு இயந்திர இயக்கமும் தேவையில்லாமல் மின்னணு முறையில் குவியத்தை சரிசெய்ய இயலும். மின்னழுத்தத்தைப் பயன்படுத்தி உள்ளிருக்கும் எண்ணெய்-நீர் இடைமுகத்தின் வடிவத்தை மாற்ற முடியும். இது அதன் குவிய நீளத்தை மாற்றுகிறது.

தொழில்துறை ஒளியமைப்பு உத்திகள் (lighting techniques)

தொழில்துறை ஒளி அமைப்பில் நம்முடைய இலட்சியம் என்னவென்றால் நாம் எடுக்கும் படத்தில் ஒளி-இருள் மாறுபாடு தெள்ளத் தெளிவாகத் தெரியவேண்டும். தேவையைப் பொருத்துக் கீழ்கண்ட விளக்குகளைத் தேர்வு செய்யலாம்.

  • ஒளிர் குழாய் விளக்குகள் (Fluorescent tubes) 
  • ஹேலோஜன் (Halogen) மற்றும் செனான் (xenon) விளக்குகள் 
  • ஒளிமுனை (LED) விளக்குகள்
  • சீரொளி (Laser) விளக்குகள்

நன்றி

  1. Machine Vision Plus

இத்தொடரில் அடுத்த கட்டுரை: இயந்திரப் பார்வை மின்சுற்றுப் பலகைகள் (Machine vision boards)

ஓபன்எம்வி கேம் (OpenMV Cam). ஹஸ்கி லென்ஸ் (HuskyLens). ஜெவாய்ஸ் (JeVois). பிக்ஸி 2 (Pixy 2). அர்டு கேம் (ArduCAM).

ashokramach@gmail.com


Viewing all articles
Browse latest Browse all 1914

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!