Quantcast
Channel: கணியம்
Viewing all articles
Browse latest Browse all 1914

Spell4Wiki –விக்சனரிக்கான பிரத்யேக ஆன்ட்ராய்டு செயலி…

$
0
0

கணியம் அறக்கட்டளை மற்றும் தமிழ் விக்கிபீடியர்கள் சிலரது தொடர் முயற்சியால், விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் அமைப்பைச் சேர்ந்த நண்பர் மணிமாறன் அவர்களால் ஆன்ட்ராய்டு இயங்குதளத்தில் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

விக்கித் திட்டங்களில் ஒன்றான விக்சனரி – கட்டற்ற பன்மொழி அகரமுதலியொன்றை உருவாக்கும் கூட்டு முயற்சிக்கு வலுசேர்க்கும் விதமாக இந்தச் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விக்சனரிக்கு மற்றும் விக்கிப் பொதுவகத்திற்கு எளிமையான முறையில் ஒலிப்புக்கோப்புகளை உருவாக்குவதில் பங்களிக்க முடியும். மேலும் இது ஒரு அகராதிபோலச் செயல்பட்டு, சொற்களுக்கான தகவலை விக்சனரியிலிருந்து பெற்று தரும்.


அம்சங்கள்

1. Spell For Wiktionary – இதன் மூலம் விக்சனரியில் உள்ள சொற்களுக்கு ஒலியினை சேர்க்கலாம். தற்போது தமிழ் மொழிக்கு மட்டுமே இது உருவாக்கப்பட்டுள்ளது. விரைவில் பிற மொழிகளுக்கும் பங்களிக்கும் வகையில் உருவாக்கப்படும்.

2. Spell For Word List – இதன் மூலம் பல சொற்களை ஒரே நேரத்தில் நகலெடுத்து ஒட்டுவதன் மூலமாகவோ கோப்புகளிலிருந்து படிப்பதன் மூலமாகவோ அவ்வார்த்தைகளுக்கு ஒலிப்புக்கோப்பினை எம்மொழியிலும் எளிதாகப் பங்களிக்க முடியும்.

3. Spell For Word – இதன் மூலம் ஒரே ஒரு வார்த்தைக்காக விரைவாக ஒலிப்புக்கோப்பினை எந்த மொழிக்கும் பங்களிக்க முடியும்.

4. Wiktionary – இதன் மூலம் எந்த ஒரு மொழிச் சொல்லின் பொருள், மூலம் மற்றும் விளக்கத்தைத் தெரிந்துகொள்ள முடியும்.

மேலும் இச்செயலியினை சாதாரண அகராதிபோல எவ்வித பங்களிப்புமின்றி  பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பது மேலும் சிறப்பு. கடந்த ஒன்றரை வருட கடின உழைப்பின் மூலம் இச்செயலி இந்நிலைக்கு மேம்படுத்தப்பட்டுள்ளது.

spell4wiki

செயலியின் முன்தோற்றம்


Wikimedia Hackathon 2020 (Remote)

Wikimedia Hackathon என்பது உலக அளவில் உள்ள விக்கிமீடியர்கள் பலர் ஒன்றிணைந்து விக்கிமீடியாவிற்கு கருவிகள், பயன்பாடுகளைக் குழுவாக அமர்ந்து உருவாக்க வருடாவருடம் நடத்தப்படும் ஒரு நிகழ்வாகும்.

இது இவ்வருடம் 2020ல் மே, 9 முதல் 11 வரை Remote Hackathon-ஆக நடைபெற்றது. இதில் நமது Spell4Wiki செயலியும் பங்குபெற்றது. மே 10, 2020 இரவு 10.30 க்கு இதனைப் பற்றிய விளக்கக்காட்சியினை(Presentation/Showcase) மற்ற விக்கிமீடியர்களுக்கு அளிக்கப்பட்டது. பல விக்கிமீடியர்கள் வாழ்த்துக்களையும், மகிழ்ச்சியையும் தெரிவித்தனர். Wikimedia Hackathon-ல் மொத்தம் 16 கருவிகள்பற்றி விளக்கக்காட்சி வழங்கப்பட்டது அதில் நமது செயலியும் காட்சிப்படுத்தப்பட்டது.

இந்தச் சுட்டியில் காட்சிவிளக்கத்தை காணலாம் : www.youtube.com/watch?v=E19-sDvjXD8&t=1980


பங்களிப்பாளர்கள்

மணிமாறன் – செயலி உருவாக்குநர்.
சீனிவாசன், தகவலுவழன், கலீல் ஜாகீர், கணேஷ், ராகுல்காந்த், சிவராம், Gergo Tisza, bawolff, Jan Ainali ஆகியோர் தொழில்நுட்ப உதவிகளைச் செய்துள்ளனர்.

செயலிக்கான மூலநிரல் : Spell4Wiki

இறுதிக்கட்ட பணிகளை எட்டியுள்ள செயலி விரையில் கூகிள் ப்ளே ஸ்டோருக்கு பதிவேற்றப்பட்டு, நமது அனைவரின் பயன்பாட்டுக்கும் கிடைக்கும்.


Viewing all articles
Browse latest Browse all 1914

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!