Quantcast
Channel: கணியம்
Viewing all articles
Browse latest Browse all 1914

க்னு / லினக்ஸ் நிறுவல் விழா 2013 (GNU/Linux Install Fest 2013)

$
0
0

சென்னையை மையமாய்க் கொண்ட இந்திய க்னு / லினக்ஸ் (ILUGC) குழுவின் முனைப்பால், கணிணி பயனாளர்களுக்கு க்னு / லினக்ஸ் இயங்குதளங்களை முயற்சித்துப் பார்க்க சிறப்பானதொரு வாய்ப்பினை வழங்குவதில் பெருமகிழ்ச்சியடைகிறோம்.

இந் நிகழ்வு 2013 ஆகஸ்டு மாதம் முழுதும் நடைபெற உள்ளது. (August 1 – 31 , 2013).

க்னு / லினக்ஸ் இயங்குதளங்களை உங்கள் வீட்டுக் கணிணிகளில் முயற்சிக்க இந்த நிறுவல் விழாவினை நடத்துகிறோம். எங்களைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள GNU/Linux Users Group Chennai http://www.ilugc.in /பக்கம் செல்லுங்கள்

நீங்கள் ஏற்கனவே க்னு / லினக்ஸ் பயன்படுத்தினாலோ, பலர் க்னு / லினக்ஸ் பயன்படுத்த வேண்டும் என்ற ஆவல் உள்ளவராகவோ இருந்தால்.. தயக்கம் வேண்டாம்.. வாங்க… பதிவு செய்து http://bit.ly/gnulinux-installfest சங்கத்தில் இணையுங்கள்!!

விழா நோக்கம்:

க்னு / லினக்ஸ் இயங்குதளங்களை நிறுவ உதவுவதன் மூலம், மக்களிடையே க்னு / லினக்ஸ் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் அவர்களின் க்னு / லினக்ஸ் பற்றிய மனக்கலக்கத்தை நீக்குதல்.

நீங்கள் ஏன் முயற்சிக்க வேண்டும்?

க்னு / லினக்ஸ் நிறுவி முயற்சிக்க அருமையான ஐந்து காரணங்கள்:

  1. சுதந்திரம்
  2. நச்சு நிரல் (Virus, Malware & Spyware) பற்றிய கவலை இல்லை
  3. விலையில்லா இயங்குதளம்
  4. சமூகம், சுற்றுச்சூழல் ஆகியவற்றுக்கு அருமையான குழுக்களின் ஆதரவுடன் ஏதேனும் நன்மை செய்தல்
  5. உங்களுக்கு மிகவும் பிடித்த பகிர்ந்தளிப்புடன் விளையாடலாம்.

இதற்கு மேலும் காரணங்கள் வேண்டுமா?? இதைப் பாருங்க! http://www.whylinuxisbetter.net/

‘இப்ப பயன்படுத்தும் விண்டோஸை (Windows) விட முடியாது!! ஆனாலும், க்னு / லினக்ஸ் முயற்சிக்க விரும்புகிறேன்’ என்கிறீர்களா? கவலையை விடுங்க!! நம்ம நண்பர்கள் அதைப் பார்த்துக்குவாங்க!!

உங்களுக்கு க்னு / லினக்ஸ் நிறுவ உதவுவதற்காக நன்கு அனுபவமுள்ள தன்னார்வல நண்பர்கள் காத்துக் கொண்டிருக்கிறனர். ‘நிறுவல் விழா ஆர்வலர்கள் http://ilugc.in/content/install-fest-2013-volunteers/

பக்கம் சென்றால், அவர்களின் விவரம் கிடைக்கும். உங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள நண்பரை அணுகி நீங்களும் லினக்ஸ் பயன்படுத்துங்கள்.

க்னு / லினக்ஸ் நிறுவுங்க…. கொண்டாடுங்க!!

தொடர்பிற்கு: சிவகார்த்திகேயன் <seesiva AT gmail DOT com> , ஸ்ரீனிவாசன் <tshrinivasan AT gmail DOT com>


Viewing all articles
Browse latest Browse all 1914

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!