Quantcast
Channel: கணியம்
Viewing all articles
Browse latest Browse all 1914

எளிய, இனிய கணினி மொழி –ரூபி – 21 –சரங்களைக் கையாளுதல்

$
0
0

இந்த அத்தியாயத்தில் ரூபியில் சரங்களை மாற்றுதல்,பெருக்குதல் மற்றும் இடைப்புகுத்தலை காணலாம். மேலும், ரூபியின் chomp மற்றும் chop செயற்கூறுகளைப்பற்றியும் காணலாம்.

சரத்தின் பகுதியை மாற்றுதல்:

ரூபியில் [ ]= செயற்கூற்றை பயன்படுத்தி சரத்தின் பகுதியை மாற்ற இயலும். இந்த செயற்கூற்றைப் பயன்படுத்தி மாற்ற வேண்டிய சரத்தை செயற்கூற்றிற்கு அனுப்பி புதிய சரத்தை அமைக்கலாம். உதாரணம் பின்வருமாறு:

myString = "Welcome to JavaScript!"

myString["JavaScript"]= "Ruby"

puts myString
=> "Welcome to Ruby!"

இந்த உதாரணத்தில், “JavaScript” என்ற வார்த்தை “Ruby” என்ற வார்த்தை கொண்டு மாற்றி விட்டோம்.
மேற்கண்ட எடுத்துக்காட்டில், ஒரு சொல்லிற்கு பதிலாக, முழுமையாக இன்னொரு சொல்லை சரத்தில் புகுத்தினோம். மாறாக, ஒரு குறியீட்டிற்கு பதிலாக, ஒரு சொல்லை உட்புகுத்தவேண்டுமெனில், [ ]= செயற்கூற்றிற்கு, எந்த இடத்தில் மாற்ற வேண்டுமோ அந்த index-யை அனுப்பவேண்டும். பின்வரும் உதாரணத்தில், சரத்திலுள்ள ஒரு குறிப்பிட்ட இடத்தில் உள்ள வார்த்தைகளை மாற்றலாம்:

myString = "Welcome to JavaScript!"
myString[10]= "Ruby"

puts myString
=> "Welcome toRubyJavaScript!"

மேலும் index range-யை கொண்டும் மாற்றி அமைக்கலாம். உதாரணத்திற்கு, index 8 முதல் 20 வரை உள்ள எழுத்துக்களை மாற்றலாம்:

myString = "Welcome to JavaScript!"
=> "Welcome to JavaScript!"

myString[8..20]= "Ruby"
=> "Ruby"

puts myString
=> "Welcome Ruby!"

சரத்தின் ஒரு பகுதியை மாற்றுதல்:

gsub மற்றும் gsub! செயற்கூறுகளைப் பயன்படுத்தி மற்றொரு விரைவான மற்றும் எளிதான வகையில், சரத்தின் ஒரு பகுதியை, மற்றொரு சரத்தைக் கொண்டு மாற்றலாம். இந்த செயற்கூறுகளில் இரண்டு arguments அனுப்ப வேண்டும். அதில் ஒன்று தேடப்படும் சரம் மற்றொன்று புகுத்தப்படவேண்டிய சரம். gsub செயற்கூறு மாற்றப்பட்ட புதிய சரத்தை திருப்பி அனுப்பும். ஆனால் உண்மையான சரத்தில் எந்த மாற்றமும் இருக்காது. மாறாக gsub! செயற்கூறு, நேரடியாக , கொடுக்கப்பட்ட சரத்தையே மாற்றிவிடும். செயற்கூற்றின்ன் இறுதியில் ! இருந்தால், அது அழைக்கப்படும் பொருளில் நேரடி மாற்றங்களைச்செய்யும் என முந்தைய அத்தியாயங்களில் அறிந்த்தை நினைவுகூறலாம்.:

myString = "Welcome to PHP Essentials!"
=> "Welcome to PHP Essentials!"

myString.gsub("PHP", "Ruby")
=> "Welcome to Ruby Essentials!"

replace method-டை கொண்டு மொத்த string மாற்றியமைக்க முடியும்:

myString = "Welcome to PHP!"
=> "Welcome to PHP!"

myString.replace "Goodbye to PHP!"
=> "Goodbye to PHP!"

மீண்டும் மீண்டும் ரூபி சரத்தை பதித்தல்:

ஒரு எண்ணைக்கொண்டு, சரத்தை பெருக்க ரூபி அனுமதிக்கிறது. இதற்கு * செயற்கூற்றை பயன்படுத்தலாம். உதாரணமாக, எண் 3-ஐக்கொண்டு, ஒரு சரத்தைப்பெருக்கினால், அந்த சரம் மூன்று முறை அச்சிடப்படுகிறது:

myString = "Is that an echo? "
=> "Is that an echo? "

myString * 3
=> "Is that an echo? Is that an echo? Is that an echo? "

சரத்தில் சொற்றொடரை இடைப்புகுத்தல்:

இதுவரை இந்த அத்தியாயத்தில் ரூபி சரம் என்ற பொருளிலுள்ள சொற்றொடரை மாற்றியமைப்பதை கண்டோம். மற்றொரு பொதுவான தேவை என்னவென்றால் சரத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒரு புதிய சொற்றொடரை இடைப்புகுத்தலாம். இதை ரூபியில் insert செயற்கூற்றைக்கொண்டு செய்யலாம். Insert செயற்கூற்றில் arguments-ஆக, எங்கு இடைப்புகுத்த வேண்டுமோ அந்த index-ம் அதை தொடர்ந்து இடைப்புகுத்த வேண்டிய string-யையும் கொடுக்க வேண்டும்:

myString = "Paris in Spring"

myString.insert 8, " the"
=> "Paris in the Spring"

chomp மற்றும் chop செயற்கூறுகள்:

Chop செயற்கூற்றைக்கொண்டு சரத்திலுள்ள கடைசி எழுத்தை நீக்கலாம்.

myString = "Paris in the Spring!"
=> "Paris in the Spring!"

myString.chop
=> "Paris in the Spring"

இதில் chop செயற்கூறு மாற்றப்பட்ட சரத்தை திருப்பி அனுப்பும். மேலும் இந்த செயற்கூறு கொடுக்கபட்ட சரத்தை மாற்றாது. அதற்கு Chop! செயற்கூற்றைப் பயன்படுத்த வேண்டும்.
Chomp செயற்கூறு சரத்திலுள்ள record separators நீக்கும். Record separator $/ variable கொண்டு வரையறுக்கப்படுகிறது. இயல்பாக (default) அது புது வரிக்குறியீடு (/n) ஆகும்.

myString = "Please keep\n off the\n grass"
=> "Please keep\n off the\n grass\n"

myString.chomp!
=> "Please keep\n off the\n grass"

சரத்திலுள்ள எழுத்துக்களை திருப்பி அமைத்தல்:

Reverse செயற்கூற்றைப் பயன்படுத்தி சரத்தின் எழுத்துக்களை திருப்பி அமைக்க முடியும்:

myString = "Paris in the Spring"
=> "Paris in the Spring"

myString.reverse
=> "gnirpS eht ni siraP"

சரத்தின் case-யை மாற்றுதல்:

சரத்தின் முதல் எழுத்தை ஆங்கிலத்தில் பெரிய எழுத்தாக மாற்ற capitalize மற்றும் capitalize! செயற்கூறுகளைப் பயன்படுத்தலாம்.(முதல் ஒன்று மாற்றப்பட்ட சரத்தை அனுப்பும், இரண்டாவது முதலவதான சரத்தையே மாற்றும்):

"paris in the spring".capitalize
=> "Paris in the spring"

ரூபி சரத்திலுள்ள ஒவ்வொரு வார்த்தையின் முதல் எழுத்தை ஆங்கிலத்தில் பெரிய எழுத்தாக மாற்ற மடக்கு கட்டளைகளைப் பயன்படுத்தலாம்:

myArray="one two three".split(/ /)
=> ["one", "two", "three"]
myArray.each {|word| puts word.capitalize}
One
Two
Three
=> ["one", "two", "three"]

சரத்திலுள்ள ஒவ்வொரு எழுத்தையும் case மாற்ற upcase,downcase மற்றும் swapcase செயற்கூறுகளைப் பயன்படுத்தலாம். இந்த செயற்கூறுகளை அதன் பெயர் கொண்டே அறியலாம். ஆனால் சந்தேகத்தை நீக்க சில எடுத்துக்காட்டுகளை காணலாம்:

"PLEASE DON'T SHOUT!".downcase
=> "please don't shout!"

"speak up. i can't here you!".upcase
=> "SPEAK UP. I CAN'T HERE YOU!"

"What the Capital And Lower Case Letters Swap".swapcase
=> "wHAT THE cAPITAL aND lOWER cASE lETTERS sWAP"


— தொடரும்

பிரியா – priya.budsp@gmail.com – ஐக்கிய அரபு அமீரகம்


Viewing all articles
Browse latest Browse all 1914