Quantcast
Channel: கணியம்
Viewing all articles
Browse latest Browse all 1914

C மொழியின் சில முக்கியமான குறிச்சொற்கள் |எளிய தமிழில் சி

$
0
0

எளிய தமிழில் சி மொழி தொடர்பான கட்டுரைகளை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்றைக்கு நாம் பார்க்க இருப்பது சில முக்கியமான சீன் மொழியின் குறிச்சொற்கள் (keywords) குறித்துதான். இந்த குறி சொற்களை கவனமாக படித்து வைத்துக் கொள்ளுங்கள்.

நாம் அடுத்தடுத்து பார்க்கப் போகிற நிரல் ஆக்கங்களுக்கு இத்தகைய குறிச்சொற்கள் முக்கியமானது. மொத்தமாக சீ மொழியில் 32 குறிச்சொற்கள் இருக்கிறது. இந்த அனைத்து குறிச்சொற்களையும் முதலிலேயே கற்று வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை போகப் போக ஒவ்வொரு கட்டுரையின் வாயிலாக கற்றுக் கொள்ளலாம்.

குறிப்பிட்ட சில குறிச் சொற்கள் மட்டும் உங்களுக்கு அடிக்கடி தேவைப்படும் அவை குறித்து மட்டும் இப்போது பார்க்கலாம்.

printf() – நீங்கள் வழங்கக்கூடிய உள்ளீடை திரையில் காண்பிப்பதற்கு பொதுவாக இந்த கசொல் பயன்படுத்தப்படுகிறது.

scanf() – நீங்கள் வழங்கக்கூடிய உள்ளீடை படித்து சேமித்து வைத்துக் கொள்வதற்கு பொதுவாக இந்த கசொல் பயன்படுத்தப்படுகிறது.

மேலே குறிப்பிட்ட இரண்டும் குறிச்சொற்கள் கிடையாது.மாறாக, C மொழியின் செயல்பாடுகள் என அறியப்படுகிறது.இருந்தாலும் குறிச்சொற்களுக்கு இணையாக இந்த இரண்டு சொற்களையும் அறிந்து வைத்திருப்பது மிக மிக முக்கியமானது.

unsigned int – நேர்குறி(+) மதிப்புகளை மட்டுமே இதில் சேமித்து வைக்க முடியும் சுமார் 64,000 வரை உள்ள எண்களை சேமித்து வைக்கலாம். – நான்கு இலக்க எண்களில் சுமார்  -32000 முதல் + 32000வரை உள்ள எண்களை சேமித்து வைப்பதற்கு இதை பயன்படுத்தலாம். எண்களை குறிப்பதற்கு பொதுவாக இந்த குறிச்சொல் பயன்படுத்தப்படும். இதில் நேர் குறி மற்றும் எதிர் குறி எண்களை சேமித்து வைக்க முடியும்.

Int – நான்கு இலக்க எண்களில் சுமார்  -32000 முதல் + 32000வரை உள்ள எண்களை சேமித்து வைப்பதற்கு இதை பயன்படுத்தலாம். எண்களை குறிப்பதற்கு பொதுவாக இந்த குறிச்சொல் பயன்படுத்தப்படும். இதில் நேர் குறி மற்றும் எதிர் குறி எண்களை சேமித்து வைக்க முடியும்.

மேற்குறிப்பிட்ட, இரண்டு வகைகளும் இரண்டு byte அளவிலான தரவுகளை சேமித்து வைக்கக்கூடிய மதிப்பாகும்

சில நேரங்களில் int மதிப்பானது நான்கு byte அளவிலான தரவுகளை கூட சேமிக்க வைக்கும்.

  float – புள்ளியிட்ட தசம மதிப்புகளை சேமித்து வைப்பதற்கு இது பயன்படுத்தப்படுகிறது.eg: a=5.1

long – int ஐ விடவும் அதிகமான இலக்கங்களைக் கொண்டு எண்களை சேமித்து வைப்பதற்கு பயன்படும்.

Short– int போலவே செயல்படுகிறது ஆனால் அதைவிட சிறிய மதிப்புகளை நீங்கள் செய்து வைக்க முடியும். இதில் நிலையாக இரண்டு byte அளவிலான எண்களை மட்டுமே சேகரித்து வைக்க முடியும்.

Char – எண்கள் அல்லாத எழுத்துக்களை பதிவு செய்து வைப்பதற்கு இது பயன்படுத்தப்படுகிறது. இதன் அளவு இரண்டு byte.

goto-ஒரு குறிப்பிட்ட வரிக்கு செல்வதற்கு இந்த குறிச்சொல்லை பயன்படுத்துவார்கள்.

switch -நீங்கள் எழுதிய நிரலில், ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து விலகி மற்றும் ஒரு இடத்திற்கு செல்வதற்கு இதை பயன்படுத்துவீர்கள்.

if – சூழ்நிலை (Condition) அடிப்படையிலான நிரலாக்கங்களுக்கு பயன்படுத்தப்படும் எடுத்துக்காட்டு வழங்கினால் எளிமையாக புரியும்.(Like if a= 5,then b= 1)

else – சூழ்நிலை அடிப்படையான நிரலாக்கங்களில் குறிப்பிட்ட வகையிலான சூழ்நிலைகளுக்கு பிறகு கடைசியாக எதுவுமே சரியாக அமையாவிட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதற்கு இதை பயன்படுத்துவார்கள். இதற்கும் ஒரு எடுத்துக்காட்டு நிரலாக்கத்தின் மூலம் எளிமையாக புரிந்து கொள்ளலாம்.

Void – சாதாரணமாக எழுதப்படும் நிரலாக்கங்களில் முடிவில் திருப்புதல்(return )மதிப்பை வழங்க வேண்டும். இதன் மூலம் அந்த இடத்திலேயே நிரல் நிறைவடைந்து விட்டது என்று கணினி புரிந்து கொள்ளும். ஆனால் திருப்புதல் மதிப்பை வழங்காமலும் , உங்களால் நிரல் எழுத முடியும்.அதற்கு நிரலா ஆக்கத்தின் முதன்மை பகுதியில் இந்த குறிச்சொல்லை பயன்படுத்த வேண்டும்.

ஆரம்பத்தில் c மொழியை கற்றுக் கொள்பவர்களுக்கு இந்த கட்டுரை சற்று புரியாமல் இருக்கலாம்.போகப் போக இது தொடர்பான எடுத்துக்காட்டு கட்டுரைகளை நாம் பார்க்கும் போது எளிமையாக புரிந்து விடும். நான் இங்கே குறிப்பிட்டு இருக்கின்ற பத்து குறிச்சொற்களை மட்டும் நீங்கள் தெரிந்து வைத்துக் கொண்டாலே அடிப்படை அளவிலான சி நிரல ஆக்கங்களை புரிந்து கொள்ள முடியும். மேலும்,  இத்தகைய குறிச்சொற்கள் தான் பெரும்பாலான கணினி மொழிகளிலும் பயன்படுத்தப்படுகிறது. எனவே குறி சொற்களை கற்றுக் கொள்வது இன்றியமையாதது.

மீண்டும் ஒரு எளிய தமிழில் c கட்டுரையோடு உங்களை வந்து சந்திக்கிறேன்.


Viewing all articles
Browse latest Browse all 1914

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!