Quantcast
Channel: கணியம்
Viewing all articles
Browse latest Browse all 1914

எளிய தமிழில் HTML – 6 – Forms

$
0
0

Forms

இதுவரை எத்தகைய வடிவிலெல்லாம் தகவல்களை பயனர்களுக்கு வெளிப்படுத்துவது என்று பார்த்தோம். இப்போது படிவங்கள் மூலம் எவ்வாறு பயனர்களிடமிருந்து தகவல்களை பெற்றுக்கொள்வது என்று பார்க்கப்போகிறோம்.

<form> tag

ஒரு் படிவத்தை உருவாக்க <form> tag-<body>-க்குள் கொடுக்க வேண்டும். இதற்கான இணை tag படிவம் முடியும்போது இடம்பெறும். இந்த <form>-க்கு method மற்றும் action என்று இரண்டு பண்புகள் உள்ளன. method-க்கு post எனும் மதிப்பும், action-க்கு படிவத்தில் பூர்த்தி செய்யப்பட்ட விவரங்களை எங்கு அனுப்ப வேண்டும் எனும் மதிப்பும் பெற்றிருக்கும். இது பின்வருமாறு.

<form method=”post” action=”mailto:nithyadurai87@gmail.com“>

பொதுவாக action-ன் மதிப்பு ஒரு program-ஆகவோ அல்லது database-ஆகவோ இருக்கும். ஆனால் இங்கு நாம் சுலபமாகப் புரிந்து கொள்வதற்காக mailto எனும் command-ஐப் பயன்படுத்தியுள்ளோம். அதாவது படிவத்தில் பூர்த்திசெய்யப்பட்ட விவரங்கள் mailto command-ல் உள்ள மின்னஞ்சல் முகவரிக்குச் சென்றுவிடும்.

அடுத்தபடியாக பயனர்களிடமிருந்து விவரத்தைப் பெற்றுக்கொள்வதற்குப் பயன்படும் ஒவ்வொரு விதமான tags-ஐயும் பின்வருமாறு பார்க்கலாம்.

<input> tag

பயனர்களிடமிருந்து எழுத்துக்கள் எண்கள் போன்ற வகையான தகவல்களைப் பெற்றுக்கொள்ள <input> tag பயன்படும். இதற்கு type மற்றும் name என்று இரண்டு பொதுவான பண்புகள் உள்ளன. type-ஆனது பெற்றுக்கொள்ளப்போவது எவ்வகை விவரம் எனும் மதிப்பினையும், name-ஆனது பெற்றுக்கொண்ட விவரத்துக்கு ஒரு் பெயரையும் அளிக்கப் பயன்படுகிறது.

Text box

உதாரணத்துக்கு ஒருவரது பெயர் மற்றும் தொலைபேசி எண் போன்ற விவரத்தை பெற்றுக்கொள்வதற்கான இரண்டு input tags பின்வருமாறு அமையும்.

<input type=”text” size=”25″ name=”name”/>

<input type=”text” size=”10″ name=”ph”/>

இங்கு பெற்றுக்கொள்ளப்போகும் விவரம் எழுத்துக்கள் மற்றும் எண்கள் வடிவில் இருப்பதனால், இரண்டு input tag-க்கும் type-ன் மதிப்பு text என்று உள்ளது.

மேலும் முதல் input-க்கு name எனும் பெயரும், அடுத்த input-க்கு ph எனும் பெயரும் அளிக்கப்பட்டுள்ளது. அடுத்தபடியாக size எனும் பண்பு முதல் input-ல் ஒரு் பெயர் 25 எழுத்துக்கள் வரை இருக்கலாம் எனும் விவரத்தையும், அடுத்த input-ல் ஒரு் தொலைபேசி எண் 10 எண்கள் வரை இருக்கலாம் எனும் விவரத்தையும் அளிக்கிறது.

இங்கு ஒவ்வொரு input tag-ம் இணை tag ஏதுமின்றி அதனிறுதியில் / ஐப் பெற்று முடிக்கப்படுவதைக் காணலாம். எனவே இவை self closing tags என்றழைக்கப்படும்.

இதுபோன்று வெறும் இரண்டு input tags-ஐ மட்டும் program-ல் கொடுக்கும்போது அவை திரையில் வெறும் இரண்டு பெட்டிகளை மட்டும் வெளிப்படுத்தும். இந்த இரண்டு பெட்டிகளும் எதற்காக என்று பயனர்களுக்குத் தெரியாதல்லவா. அதற்காக ஒவ்வொரு input tag-ன் முன்னரும் பின்வருமாறு கொடுக்கலாம்.

Name <input type=”text” size=”25″ name=”name”/>

Phone Number <input type=”text” size=”10″ name=”ph”/>

இவை பயனர்களின் வசதிக்காக மட்டுமேயன்றி வேறு எதற்கும் கிடையாது. பயனர்கள் அளித்த விவரங்களெல்லாம் name எனும் பண்பில் உள்ள பெயரினால் மட்டுமே குறிக்கப்படும். உதாரணம்.

Name = Kaviyan

Ph = 4839403892

Radio button

இரண்டு விவரத்தைக் கொடுத்து அதில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்ய radio button பயன்படும். உதாரணத்துக்கு ஒருவர் ஆணா பெண்ணா எனும் விவரத்தை அவர்களையே type செய்ய சொல்லுவதற்கு பதிலாக, “ஆண்” , “பெண்எனும் இரண்டு radio buttons-ஐக் கொடுத்து அதில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்யுமாறு சொல்லலாம். இதற்கான input tag பின்வருமாறு அமையும்.

<input type=”radio” name=”sex” value=”M”/>

<input type=”radio” name=”sex” value=”F”/>

இவை திரையில் வெறும் இரண்டு radio button-களை மட்டுமே வெளிப்படுத்தும். எனவே எந்த button எதற்காக எனப் பயனர்கள் புரிந்து கொள்ள ஒவ்வொரு tag-க்கும் முன்னர் பின்வருமாறு கொடுக்கலாம். இவையும் பயனர்களின் புரிதலுக்காக மட்டுமே.

Male <input type=”radio” name=”sex” value=”M”/>

Female <input type=”radio” name=”sex” value=”F”/>

இங்கு value எனும் பண்பு ஒவ்வொரு option-க்கும் உரிய மதிப்பினைக் கொண்டிருக்கும். உதாரணத்துக்கு இரண்டாவது option-ஐ தேர்வு செய்தால் “F” எனும் மதிப்பு name எனும் பண்பில் உள்ள பெயரினால் குறிக்கப்பட்டு மின்னஞ்சலில் பின்வருமாறு செலுத்தப்படும்.

sex = F

முதல் option-ஆனது default-ஆக தேர்வு செய்யப்பட்ட நிலையிலேயே இருக்குமாறு அமைக்க விரும்பினால், அதனிறுதியில் ‘checked’ எனும் வார்த்தையை மட்டும் இணைத்தால் போதுமானது. இது பின்வருமாறு.

Male <input type=”radio” name=”sex” value=”M” checked/>

Checkboxes

இரண்டுக்கும் மேற்பட்ட விவரங்களைக் கொடுத்து அதிலிருந்து ஒன்றுக்கும் மேற்பட்ட விவரங்களைத் தேர்வு செய்யுமாறு அமைக்க விரும்பினால் checkboxes-ஐப் பயன்படுத்தலாம். உதாரணத்துக்கு தமிழ், ஆங்கிலம், இந்தி எனும் 3 மொழிகளில் ஒருவருக்கும் எந்தெந்த மொழிகளெல்லாம் தெரியும் எனும் விவரத்தைப் பெற்றுக்கொள்ள விரும்பினால், அதற்கான input tag பின்வருமாறு அமையும்.

<input type=”checkbox” name=”Language” value=”Tamil” />

<input type=”checkbox” name=”Language” value=”English”/>

<input type=”checkbox” name=”Language” value=”Hindi”/>

இவை மூன்று குட்டி குட்டி பெட்டிகளை மட்டுமே திரையில் வெளிப்படுத்தும். எனவே எந்த பெட்டி எந்த மொழிக்காக எனக் குறிப்பிடும் வகையில் ஒவ்வொரு input tag-க்கும் முன்னர் அந்தந்த மொழிகளின் பெயர்களை குறிப்பிடலாம்.

இங்கும் value எனும் பண்பு ஒவ்வொரு checkbox-க்கும் உரிய மதிப்பினைக் கொண்டிருக்கும். உதாரணத்துக்கு முதல் இரண்டு checkboxes-ஐ தேர்வு செய்தால் அந்தத் தகவல்களெல்லாம் பின்வருமாறு செலுத்தப்படும்.

Language = Tamil

Language = English

முதல் checkbox-ஆனது default-ஆக தேர்வு செய்யப்பட்ட நிலையிலேயே இருக்குமாறு அமைக்க விரும்பினால், அதனிறுதியில் ‘checked’ எனும் வார்த்தையை மட்டும் இணைத்தால் போதுமானது. இது பின்வருமாறு.

<input type=”checkbox” name=”Language” value=”Tamil” checked/>

Submit & Reset buttons

<input> tag-ன் type எனும் பண்பினை ‘Submit’ என்று கொடுக்கும்போது, படிவத்தில் நாம் பூர்த்தி செய்த விவரங்கள் அனைத்தும், படிவத்தின் action எனும் பண்பில் என்ன குறிப்பிடப்பட்டுள்ளதோ அதற்கேற்ப செயல்படும். ‘Reset’ என்று கொடுக்கும்போது படிவத்தில் பூர்த்தி செய்த விவரங்கள் அனைத்தும் நீக்கப்பட்டுவிடும்.

<input type=”submit”/>

<input type=”reset”/>

மேற்கூறியவாறு நாம் கொடுக்கும்போது, திரையில் வெறும் இரண்டு buttons மட்டும் வெளிப்படும். எனவே எந்த button எதற்காக எனப் பயனர்கள் புரிந்து கொள்வதற்காக value எனும் பண்பினை நாம் இணைக்க வேண்டும். இது பின்வருமாறு.

<input type=”submit” value=”ok”/>

<input type=”reset” value=”cancel”/>

இப்போது ஒரு button-ன் மேல் ‘OK’ என்றும், அடுத்த button-ன் மேல் ‘cancel’ என்றும் பயனர்களின் வசதிக்காக எழுதப்பட்டிருக்கும்.

<select> tag

ஒரு் drop-down list-ஐ உருவாக்கி அதிலிருந்து மதிப்புக்களை தேர்வு செய்ய விரும்பினால், <select> tag-ஐப் பயன்படுத்தலாம். இதற்கு இணை tag உண்டு. மேலும் name மற்றும் size என்று இரண்டு விதமான பண்புகளைப் பெற்றிருக்கும். name-ல் நாம் தேர்ந்தெடுக்கும் option-க்கு ஒரு் பெயரும், size-ல் எத்தனை option-களைக் கொடுக்கப் போகிறோம் எனும் எண்ணிக்கையும் இருக்கும். list-க்குள் இடம்பெறப்போகும் ஒவ்வொரு விவரமும் <option> எனும் இணை tag-க்குள் காணப்படும்.

உதாரணத்துக்கு 3 நகரத்தின் பெயர்களை ஒரு் drop-down list-ல் கொடுத்து, அதிலிருந்து ஒன்றை தேர்வு செய்வதற்கான code பின்வருமாறு அமையும்.

<select name=”city” size=”3″>

<option>Chengalpattu</option>

<option>Kanchipuram</option>

<option>Tambaram</option>

</select>

ஒன்றுக்கும் மேற்பட்ட விவரத்தை தேர்வுசெய்யுமாறு அமைக்க விரும்பினால், select tag-க்குள் multiple எனும் வார்த்தையை இணைத்தால் போதுமானது.

<select name=”city” size=”3″ multiple>

முதல் option-ஆனது default-ஆக தேர்வு செய்யப்பட்ட நிலையிலேயே இருக்குமாறு அமைக்க விரும்பினால், option tag-க்குள் selected எனும் வார்த்தையை இணைத்தால் போதுமானது.

<option selected>Chengalpattu</option>

<textarea> tag

ஒன்றுக்கும் மேற்பட்ட பல வரிகளைக் கொண்ட கருத்துக்கள்அல்லது முகவரிபோன்ற விவரங்களைப் பயனர்களிடமிருந்து பெற்றுக்கொள்ள <textarea> tag பயன்படும். இதற்கு இணை tag உண்டு. மேலும் rows மற்றும் cols என்று இரண்டு பண்புகளைப் பெற்றிருக்கும். rows-ல் வரிகளின் எண்ணிக்கையும், cols-ல் அவற்றின் அகலமும் இடம்பெறும்.

மேற்கூறிய அனைத்து tag-ஐயும் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ஒரு் program-ஐ பின்வருமாறு காணலாம்.

 

File: form.htm

 

<html>
<head><title></title></head>
<body>
<form method=”post” action=”mailto:nithyadurai87@gmail.com”>
<pre>
Name:<input type=”text” size=”25″ name=”name”/>
Phone:<input type=”text” size=”10″ name=”ph”/>

Sex:
Male<input type=”radio” name=”sex” value=”M” checked/>
Female<input type=”radio” name=”sex” value=”F”/>

Languages Known:
Tamil<input type=”checkbox” name=”Language” value=”Tamil” checked/>
English<input type=”checkbox” name=”Language” value=”English”/>
Hindi<input type=”checkbox” name=”Language” value=”Hindi”/>

City:
<select name=”city” size=”3″ multiple>
<option selected>Chengalpattu</option>
<option>Kanchipuram</option>
<option>Tambaram</option></select>

Address:
<textarea name=”address” rows=5 cols=25></textarea>

<input type=”submit” value=”ok”/>
<input type=”reset” value=”cancel”/>
</pre>
</form>
</body>
</html>


Viewing all articles
Browse latest Browse all 1914

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!