Quantcast
Channel: கணியம்
Viewing all articles
Browse latest Browse all 1914

GitDuckஎனும் மேம்படுத்துநர்களின் திறமூலக்கருவி

$
0
0

 

GitDuck என்பது மேம்படுத்துநர்களுக்கான ஒரு திறமூல ஒத்துழைப்புக் கருவியாகும். GitDuck என்பது தொலைநிலையில் பணிபுரியும் மேம்படுத்து நர்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு நிரலாக்க கருவியாகும்.அதாவது மேம்படுத்துநர்கள் தங்கள் திரையைப் பதிவுசெய்து, அவர்களின் குறிமுறைவரிகளை கானொளி நேர முத்திரைகளுடன் இணைக்கவும், ஊடாடும் குறிமுறைவரிகளின் கானொளிகளை உருவாக்கவும் இது அனுமதிக்கிறது.
Duckly என்பது ஒரு IDE செருகுநிரலாகும், இது குறிமுறைவரிகளின் முறையை பலமுறைஇயங்கச் செய்கிறது. மேம்படுத்துநர்கள் தங்கள் குறிமுறைவரிகள், சேவையாளர், முனைமம் ஆகியவற்றைப் பகிரவும், வெவ்வேறு IDEகளைப் பயன்படுத்தும் நபர்களுடன் நிகழ்நேரத்தில் ஒத்துழைக்கவும் இது அனுமதிக்கிறது. Duckly VS குறிமுறைவரிகள் அனைத்து IntelliJ IDEA அடிப்படையிலான IDE களுக்கும் கிடைக்கிறது.
GitDuck பின்வருமாறான செயலிற்கு சிறந்தது:
இரட்டை நிரலாக்கம்
Rubber Duck பிழைத்திருத்தம்
நேரடி குறிமுறைவரிகளின் முறை
தனிப்பட்ட முறையிலும் பொதுவிலும் தொடரோட்டம் செய்யவும்
பதிவு பயிற்சிகள் , ஒத்திகைகள்
ஒரே அறையில் இருப்பது போல்நம்மமுடைய குழுவுடன் ஒத்துழைத்துகுறியீடு செய்யலாம் குழு எங்கிருந்தாலும் உள்ளுணர்வுடன் இணையத்தின் வாயிலாக ஒத்துழைக்கலாம்
தொலைதூர குழுக்களுக்கான நேரடி குறிமுறைவரிகளின்டு முறை
எளிமையான , எளிதான வழியில் தொலைநிலைக் குழுவுடன் இணையத்தின் வாயிலாக ஒத்துழைக்கமுடியும். தனிப்பட்ட நேரலை குறியீட்டு அமர்வுகளை உருவாக்கவும், அதில் குழு மட்டுமே பங்கேற்க முடியும். மேம்படுத்துதலை ஆவணப்படுத்தி எந்த குறியீட்டு அமர்வையும் மீண்டும் இயக்கவும் முடியும்.
தொலைதூர இரட்டையான நிரலாக்கம்
நம்முடைய நிரலாக்க குழு எங்குள்ளது என்பது முக்கியமன்று, GitDuck மூலம் ஒரு சொடுக்குதலில் தொலைநிலையில் இரட்டையான நிரலாக்க அமர்வைத் தொடங்கலாம். நம்முடைய IDE இலிருந்து நேரடியாக திரை , குறியீடு பகிர்வு அமர்வைத் தொடங்கி, தொலைநிலைக் குழுவுடன் இணையத்தில் ஒத்துழைப்பாக பணியைஇ பகிர்ந்து கொள்ளலாம்.
இந்த GitDuckஆனது எந்தவொரு கூடுதல் மென்பொருளும் இல்லாமல் தொலைநிலையில் இரட்டையான நிரலாக்கத்தை செய்து நம்முடைய குழுவுடன் உடனடியாக இணைக்க அனுமதிக்கிறது.
பதிவு குறியீட்டு பயிற்சிகள்
நம்முடைய குழுவினருக்கு கானொளிகாட்சி, குரல், குறியீட்டைக் கொண்டு ஊடாடும் குறியீட்டு பயிற்சிகளை உருவாக்கிட முடியும் . அவர்களால் நம்முடைய குறியீட்டை நகலெடுக்கவும் தொடர்பு கொள்ளவும் முடியும் நம்முடைய படிமுறைகளை எளிதான வழியில் பின்பற்றவும் முடியும்.
GitDuck ஆனது நம்மமுடைய IDE இலிருந்து நேரடியாகப் பதிவுசெய்து நம்முடைய குறிமுறைவரிகளின் தளத்தினை கானொளிகாட்சிநேர முத்திரைகளுடன் இணைக்க அனுமதிக்கிறது. தொலைநிலைக் குழு வெவ்வேறு நேரமண்டலங்களை அடிப்படையாகக் கொண்டிருந்தாலும் அவர்களுடன் ஒத்துழைக்கலாம்.
Rubber Duck எனும்பிழைத்திருத்தம்
GitDuckஆனது க்கு வரிக்கு வரி விளக்கமளிப்பதன் மூலம் நம்முடைய குறியீட்டை நன்றாகப் புரிந்து கொள்ளமுடியும் (அதனால்தான் அப்படி அழைக்கப்படுகின்றது)! இதுGitDuck ஒரு பிழைத்திருத்தத்திற்கான சரியான கருவியாகும். குறியீட்டை விளக்கமளிப்பதை நாமே பதிவு செய்து, நம்முடைய குழுவுடன் தொந்தரவு இல்லாமல் பகிர்ந்து கொள்க.
Rubber Duck பிழைத்திருத்தம் மூலம் பிழைகளை விரைவாகக் கண்டறிந்து, GitDuck ஐப் பயன்படுத்தி நாம் கற்றுக்கொண்டதை நம்முடைய தொலைநிலைக் குழுவுடன் பகிர்ந்து கொள்க
இந்த பயன்பாடானது Window, Linux ,Maxஆகிய அனைத்து இயக்கமுறைமை களிலும் செயல்படுகின்ற திறன்மிக்க கட்டற்ற பயன்பாட்டு கருவியாகும்.
மேலும் விவரங்களுக்கும் பயன்படுத்தி கொள்ளவும் duckly.com/ எனும் இணையதளமுகவரிக்கு செல்க.


Viewing all articles
Browse latest Browse all 1914

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!